உலகம்

துருக்கியில் 160 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இளைஞர் உயிருடன் மீட்பு!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 160 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

DIN

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 160 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை 7.8 ரிக்டா் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்தன. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷியா, கிர்கிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் மீட்புக் குழுக்கள் துருக்கில் மீட்புப் பணிகள் இரவும் பகலுமாக ஈடுபட்டு வருகின்றது. 

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 160 மணி நேரத்திற்குப் பிறகு இடிந்து விழுந்த கட்டடத்திலிருந்து 35 வயது இளைஞரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளதாக ரஷியாவின் அவசக்கால அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிப்.5 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் இரு நாட்டுத் தலைவர்களுடன் பேசியதை அடுத்து, ரஷியா கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்பு குழுவினரை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

SCROLL FOR NEXT