கோப்புப்படம் 
உலகம்

ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் கிருமி தொற்றுக்கு 9 பேர் பலி!

ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் கிருமி தொற்றுக்கு 9 பேர் பலியாகினர். 

DIN

ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் கிருமி தொற்றுக்கு 9 பேர் பலியாகினர். 

மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

மார்பர்க் வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான நோய்க் கிருமியாகும், இது கடுமையான காய்ச்சலை அடிக்கடி இரத்தப்போக்குடன் ஏற்படுத்துகிறது, மேலும் பல உறுப்புகளை பாதிப்படைய செய்து, உடலின் செயல் திறனைக் குறைக்கிறது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து பொது முடக்கம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஃபிலோ வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இதில் எபோலா வைரஸும் அடங்கும்.

இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மார்பர்க் கிருமியின்  பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மார்பர்க் கிருமி தொற்றுக்கு  இதுவரை சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

SCROLL FOR NEXT