அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி உள்பட 2 பேர் பலி
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.
அலபாமா: அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் புதன்கிழமை மதியம் 3 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யுஎச்-60 பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர். இது ராணுவத்தின் டென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது.
இதையும் படிக்க | யூடியூப் சிஇஓ-ஆக இந்திய வம்சாவளி நியமனம்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து ஆம்புலன்சுகள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அவர்கள் வருவதற்குள் ஹெலிகாப்டர் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. ஹெலிகாப்டரின் உள்ளே இருந்த 2 பேரின் உடல்களை கண்டுபிடித்தனர்.
ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்ததால், ஹெலிகாப்டரில் எந்த அடையாளங்களும் இல்லாததால், அதை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யுஎச்-60 பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் என்றும், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்துக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.