உலகம்

உக்ரைனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். 

DIN

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். 

அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதன்படி, ரஷியா - உக்ரைன் இடையேயான போர் ஒரு வருடத்தை எட்டியுள்ளது.

இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன. 

போரின் இடையே உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, ஒருமுறை அமெரிக்கா சென்று ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். 

இதையடுத்து ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஜோ பைடனும் ஸெலென்ஸ்கியும் நடந்து செல்லும் விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

ரஷியா - உக்ரைன் போர் ஓராண்டாக நீடித்து வரும் நிலையில் ஜோ பைடனின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT