துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 47 ஆயிரத்தைக் கடந்த பலி!
துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது.
துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது.
அதில் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியிலும் சிரியாவின் வடக்குப் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 47,244 ஆக உயர்ந்துள்ளது.