கோப்புப்படம் 
உலகம்

மெக்சிகோ சிறையில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி; 24 பேர் தப்பியோட்டம்

மெக்சிகோ சிறையில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 24 பேர் தப்பியோடியுள்ளனர். 

DIN

மெக்சிகோ சிறையில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 24 பேர் தப்பியோடியுள்ளனர். 

மெக்சிகோவின் சியுடட்ஜூவாரேஸ் பகுதியில் உள்ள சிறையில் மர்ம நபர்கள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 சிறை காவலர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த நபர் சிறையில் இருந்து 24 பேரை தப்பிக்க வைத்துள்ளனர். அந்த 24 குற்றவாளிகளிகளை தப்பிக்கவைக்கத் தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்குமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுமார் 5 மணி நேரமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதனால் சிறைக்குள்ளும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிறையில் உள்ள பொருள்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

துப்பாக்கிச்சூடு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தபிறகு மர்ம நபர்களின் ஒரு வாகனத்தை காவல்துறையினர் துரத்திப் பிடித்து 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT