உலகம்

மெக்ஸிகோ சிறையில் தாக்குதல்: பலி  எண்ணிக்கை 17 ஆக உயர்வு

மெக்ஸிகோவில் cள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

IANS

மெக்ஸிகோவில் cள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

மெக்ஸிகோவில் உள்ள சிறைச் சாலையொன்றின் மீது கவச வாகனங்களில் வந்த நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 14 போ் பலியாகினர்; அந்தச் சிறையிலிருந்து 24 கைதிகள் தப்பியோடினர்.

அமெரிக்காவின் டெக்ஸாக் மாகாணம், எல் பாஸோ நகரையொட்டி அமைந்துள்ள மெக்ஸிகோவின் எல்லை நகரம் சியுடாட் ஜுவாரெஸ்.

அந்த நகரில் அமைந்துள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு போதை மருந்து கடத்தல் கும்பல்களிடையே கலவரம் வெடித்து கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அந்த சிறைச்சலைக்கு கவச வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7 மணிக்கு வந்த ஒரு கும்பல், சிறைப் பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. அதையடுத்து, சிறைச் சாலை காவலர்களுக்கும் கவச வாகனங்களில் வந்த கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 10 சிறைக் காவலர்களும் 7 கைதிகளும் பலியாகினா்; 13 போ் காயமடைந்தனா். இந்த மோதலைப் பயன்படுத்தி, சிறையிலிருந்த 27 கைதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் லூயிஸ்கிரெசென்சியோ சாண்டோவல் கூறுகையில், 

சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் 10 செல்லிடப்பேசி, ஆயுதங்கள், போதைப்பொருள்கள் மற்றும் 1.7 மில்லியன் பெசோக்கள்($87,000) ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

சிறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் லாஸ் மெக்சிகல்ஸ் எனப்படும் கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவார். 

இந்தத் தாக்குதல் தொடா்பான விசாரணையைத் தொடக்கியுள்ளதாக மெக்ஸிகோ நீதித்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT