உலகம்

மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் பணியிலிருந்து நீக்கம் செய்தனர்.

இவர்கள் வரிசையில் கடந்தாண்டு நவம்பர் மாதமே 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்திருந்தது அமேசான் நிறுவனம்.

இந்நிலையில், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு இன்று காலை அனுப்பிய செய்தியில்,

தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. இதனால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பணிநீக்கமானது இந்தாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கமானது அமேசான் வரலாற்றுலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

புத்தாண்டு பரிசை எதிர்பார்த்த ஊழியர்களுக்கு, ஆண்டின் முதல் வாரத்திலேயே அதிர்ச்சி அளித்துள்ளது அமேசான் நிறுவனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT