திருமணத்தின்போது தலைமுடியை வெட்டிய மணமகள்.. நெகிழ்ச்சியான சம்பவம் 
உலகம்

திருமணத்தின்போது தலைமுடியை வெட்டிய மணமகள்.. நெகிழ்ச்சியான சம்பவம்

தலைமுடியை பாதியாக வெட்டிக் கொண்ட மணமகளைப் பார்த்து திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மட்டுமல்ல, விடியோவைப் பார்க்கும் லட்சக்கணக்கானோர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

DIN


தனது திருமண வரவேற்பின்போது, யாரும் எதிர்பாராத வகையில், தனது தலைமுடியை பாதியாக வெட்டிக் கொண்ட மணமகளைப் பார்த்து திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மட்டுமல்ல, விடியோவைப் பார்க்கும் லட்சக்கணக்கானோர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மணமகள் தனது தலைமுடியை பாதியாக வெட்டிக் கொள்ளும் போது, மணமகன், மணமகளை அணைத்து முத்தமிடுகிறார். மணமகளின் உறவினர்கள் தொலைவில் நின்று கண் கலங்குகின்றனர். சிலர் கண்ணீர் துளிகளை துடைத்துக் கொள்கிறார்கள்.

இன்ஸ்டிகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் விரும்பிய அந்த விடியோவில், மணமகள், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகிறார். அங்கு, தான் தனது தலைமுடியை வெட்டிக்கொள்ளப் போவதாக அறிவித்து, செல்கிறார்.

தனது தலைமுடியை வெட்டி புற்றுநோயாளிகளுக்கு தானமளிக்க விரும்புவதாகக் கூறும் மணமகள், தனது நீண்ட அலங்காரம் செய்த கூந்தலை அவிழ்த்து அதனை வெட்டி எடுக்கிறார். இதனைப் பார்க்கும் பலரும் கண்ணீர் விடுகிறார்கள். சிலர் கைத்தட்டி பாராட்டுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT