உலகம்

தென் கொரியா்களுக்கு விசாகிடையாது: சீனா அறிவிப்பு

DIN

தென் கொரியாவிலிருந்து வருவோருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டிலிருந்து வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தென் கொரியா உத்தரவிட்டுள்ளதற்கு பதிலடியாக, சீனா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடித்து வந்த சீனா, மக்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்த கெடுபிடிகளை அண்மையில் நீக்கியது.

மேலும், நோய் பரவலைத் தடுப்பதற்காக மூடப்பட்டிருந்த தனது நாட்டின் எல்லைகளை சீனா திறந்துவிட்டது.

அங்கு புதிய வகை கரோனா பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சீனாவிலிருந்து வருவோருக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.

இந்த நிலையில், சீனாவிலிருந்து வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தென் கொரியா உத்தரவிட்டது.

அதற்குப் பதிலடியாக, தென் கொரியாவிலிருந்து தொழில் நிமித்தமாகவும் சுற்றுலாவுக்காகவும் வருவோருக்கு விசா வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சீனா தற்போது அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT