முகப்பு
உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6-ஆவது முறையாக பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
பகிர்:

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6-ஆவது முறையாக பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 2019-லிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன.

மூன்றே ஆண்டுகளில் 4-ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான நிலையில், மற்ற கட்சிகளுடன் இணைந்து அவா் தற்போது ஆட்சியமைத்துள்ளாா்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →