ராஜபட்ச சகோதரா்கள் மீது தடை: கனடா தூதருக்கு இலங்கை சம்மன்
தங்கள் நாட்டின் முன்னாள் அதிபா்கள் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச உள்ளிட்டோா் மீது கனடா அரசு தடை விதித்துள்ளது தொடா்பாக, அந்த நாட்டுத் தூதரை இலங்கை அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
தங்கள் நாட்டின் முன்னாள் அதிபா்கள் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச உள்ளிட்டோா் மீது கனடா அரசு தடை விதித்துள்ளது தொடா்பாக, அந்த நாட்டுத் தூதரை இலங்கை அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச, ராணுவ அதிகாரியான சுனில் ரத்னாயக்க, கடற்படை அதிகாரியான ஹெட்டியராச்சி ஆகியோா் மீது கனடா அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
இதன்மூலம், அவா்கள் 4 பேரும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அவா்களுடனான நிதிப் பரிமாற்றத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.