அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜில் பைடன் 
உலகம்

அமெரிக்க அதிபரின் மனைவிக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

DIN

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜில் பைடன்(வயது 72) அறுவை சிகிச்சைக்காக மேரிலாந்தில் உள்ள தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

ராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் வலது கண் மற்றும் மார்பக பகுதிகளில் இருந்த புற்றுநோய் கட்டிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

சுமார் 9 மணிநேரம் மருத்துவமனையில் இருந்த ஜோ பைடன் வெள்ளை மாளிகை திரும்பிய நிலையில், இன்று மாலைக்குள் ஜில் பைடனும் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி வழக்கமாக நடைபெற்ற பரிசோதனையில் ஜில் பைடனுக்கு வலது கண் பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, புதன்கிழமை மார்பகம் மற்றும் இடது கண் இமைப் பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டறிபட்டது.

தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கு ஜில் பைடன் நலமுடன் இருப்பதாகவும், இடது கண் இமைப் பகுதியிலுள்ள புற்றுநோய் கட்டியை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா: உக்ரைன் தாக்குதலால் உயா்ந்த எண்ணெய் விலை

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழப்பு

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

விழுந்தயம்பலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT