உலகம்

நேபாள பயணிகள் விமானம் விபத்து: 68 பேர் உடல்கள் மீட்பு

நேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 68 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 68 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தில் இருந்த 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்,  சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

எட்டி ஏர்லைன்ஸின் 9N-ANC ATR-72 விமானம் காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. காலை 11 மணியளவில் பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த 10 வெளிநாட்டவர்களில் ஐந்து இந்தியர்கள் அடங்குவதாக இந்திய தூதரகம் ட்விட் செய்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த ஐந்து இந்தியர்கள் அபிசேக் குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்: நாடாளுமன்றத்தில் தகவல்

தயக்கம் வேண்டாம்!

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

மடூரோவுக்கு எதிராக டிரம்ப் புதிய பொருளாதாரத் தடைகள்

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

SCROLL FOR NEXT