முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

இந்தோனேசியாவில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 18 ஜனவரி, 2023 at 9:29 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:14 AM

இந்தோனேசியாவில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதியில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அந்த நாட்டின் கொரண்டலோவின் தென்கிழக்கே கடலுக்கு அடியில் 147 கி.மீ. தொலைவில் (91 மைல்)  மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த நிலடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.