உலகம்

அமெரிக்காவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

DIN

அமெரிக்காவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாகினர். 

அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தின் மாண்டிரி பார்க் பகுதியில் உள்ள நடன ஸ்டுடியோவில் நேற்றிரவு சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தூப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT