wuhan100804 
உலகம்

கரோனா: வூஹான் ஆய்வகத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

சீனாவில் உள்ள வூஹான் நுண்ணுயிரியல் மையத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா.

DIN

வாஷிங்டன்: சீனாவில் உள்ள வூஹான் நுண்ணுயிரியல் மையத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நிலைகள் குறித்த அறிக்கைகளை தர மறுத்ததால், நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா.

அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகத்தில், சுகாதாரம் மற்றும் மனித சேவைக்கான துறை, வூஹான் ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், தங்களது நிதியுதவியைப் பெறும் ஆய்வகங்களின் பட்டியலிலிருந்து வூஹான் ஆய்வகம் நிரந்தரமாக நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வூஹான் ஆய்வகம், அமெரிக்காவின் சுகாதாரத் துறையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில், அங்கிருக்கும் வசதிகள்  அமெரிக்க வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணக்கமாக இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால், அமெரிக்காவிலிருந்து மேற்கொண்டு எந்த நிதியுதவியும் இந்த ஆய்வகத்துக்குக் கிடைக்காது என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த ஆய்வகத்துக்கு ஏற்கனவே 2020ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதார மையத்திடமிருந்து நிதியுதவி வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.

கரோனா தீநுண்மி எங்கிருந்து உருவானது என்பதை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சியில், வூஹான் ஆய்வகத்தின் பாதுகாப்பு மற்றும் அதனை உறுதி செய்வதற்கான அம்சங்கள் குறித்து போதுமான தகவல்களை அளிக்க முன்வரவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT