உலகம்

குறைந்த திரெட்ஸின் பயன்பாடு! ட்விட்டரைப் பாதித்ததா?

DIN

தொடக்கத்தில் அதிக பயனர்களைப் பெற்ற மெட்டாவின் திரெட்ஸ் பயன்பாடு தற்போது குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியை ஜூலை 6 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகமான இரண்டு நாள்களில் 7 கோடி பேர் அதில் இணைந்தனர். 5 நாள்களில் திரெட்ஸில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி திரெட்ஸில் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கும் மேல். 

பிற சமூக வலைத்தளங்களை ஒப்பிடுகையில் திரெட்ஸ் மிக வேகமாக இவ்வளவு பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது எனலாம். 

ஆனால், அதன் பயன்பாட்டை பொருத்தவரையில் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செயலி நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவர்ஸ், கடந்த ஜூலை 18-22 நாள்களில் திரெட்ஸின் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

செயலி தொடங்கப்பட்ட ஜூலை 6 ஆம் தேதி ஒப்பிடுகையில் ஜூலை 18ல் திரெட்ஸில் தினசரி பயன்பாட்டு சராசரி நேரம் மற்றும் பயனர்களின் எண்ணிக்கை 75%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. 

அதுபோல முதல் நாளை(ஜூலை 7) ஒப்பிடுகையில் ஜூலை 18ல் பதிவிறக்கமும் 22% குறைந்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, திரெட்ஸில் ஜூலை 18 நிலவரப்படி 9.5 கோடி பயனர்கள் அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் இந்தியா -28%, அமெரிக்கா - 13%, பிரேசில் -13%, மெக்சிகோ -5%, ஜப்பான் - 4%. அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட 5 நாடுகள் இவை. திரெட்ஸ் 100 நாடுகளில் ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரத்தில் திரெட்ஸ் செயலின் அறிமுகம் ட்விட்டரில் பயன்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மாறாக ட்விட்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவே இந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT