உலகம்

சீன வெளியுறவு அமைச்சா் நீக்கம்

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் கங் (படம்) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

DIN

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் கங் (படம்) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த மாா்ச் 12-ஆம் தேதி அந்தப் பொறுப்பை ஏற்ற கின் கங், கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவா் என்று கூறப்படுகிறது. இதில், அவருக்கும் அதிபா் ஷி ஜின்பிங்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாகவே முக்கிய நிகழ்ச்சிகளில் கின் கங் ஓரம் கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சா் பொறுப்பிலிருந்து அவா் விலக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பே ஏற்கெனவே வகித்து வந்த வாங் யீ நியமிக்கப்படுவதாகவும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்டோா் சீனா வந்து சென்றுள்ள நிலையில் கின் கங் நீக்கப்பட்டுள்ளது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

இரவில் சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!

SCROLL FOR NEXT