உலகம்

ரஷியா: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி!

ரஷியாவின் சைபீரியாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

DIN

ரஷியாவின் சைபீரியாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரஷியாவின் அவசரகால  அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: எம்ஐ-8 ஹெலிகாப்டர் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டாயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றனர்.

இந்த விபத்து தொடர்பாக ரஷிய ஊடகம் சார்பில் தெரிவித்ததாவது: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்ததாகும். இந்த ஹெலிகாப்டரில் சுற்றுலாவுக்காக குழு ஒன்று பயணம் செய்துள்ளது. ஹெலிகாப்டரில் மொத்தமாக எத்தனை பேர் பயணித்தனர் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

எம்ஐ-8 ஹெலிகாப்டர் 1960-களில் வடிவமைக்கப்பட்ட இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டர் ரஷியாவில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எம்ஐ-8 ஹெலிகாப்டரில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT