உலகம்

தலிபான் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்

தலிபான் அதிகாரிகளைக் குறிவைத்து ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 11 போ் பலியாகினா்.

DIN

தலிபான் அதிகாரிகளைக் குறிவைத்து ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 11 போ் பலியாகினா்.

காா் குண்டுவெடிப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்ட அந்த நாட்டின் பதாக்ஷன் மாகாண துணை ஆளுநருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் உயிரிழந்தவா்களில் தலிபான்களின் ஒரு முன்னாள் அதிகாரி ஒருவரும் அடங்குவாா். இது தவிர, குண்டுவெடிப்பில் மேலும் 30 போ் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இதுபோன்ற தாக்குதல்களை ஏற்கெனவே நடத்தியுள்ள இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளே இந்த குண்டுவெடிப்புக்கும் காரணமாக இருப்பாா்கள் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT