முகப்பு
உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு!

வடக்கு ஜப்பானின் பிரதான தீவான ஹொக்கைடோவில் ஞாயிற்றுக்கிழமை சக்சிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
பகிர்:

டோக்கியோ: வடக்கு ஜப்பானின் பிரதான தீவான ஹொக்கைடோவில் ஞாயிற்றுக்கிழமை சக்சிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ தென்மேற்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 6:55 மணியளவில் சக்சிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 140 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சிட்டோஸ் மற்றும் அட்சுமாச்சோ நகரங்கள் உள்பட தீவின் பெரும்பகுதியை உலுக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அணுமின் நிலையங்களில் பாதிப்பு, மின்சார வினியோகத்தில் தடை, புல்லட் ரயில்கள் சேவை பாதிப்பு போன்ற எந்த தகவல்கள் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் நாட்டின் மிகப்பெரிய தீவான வடக்கு ஹொன்ஷூவின் சில பகுதிகளும் குலுங்கின. டோக்கியோவில் எந்த பாதிப்பும் காணப்படவில்லை. 

உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →