உலகம்

சூடான் மோதல்: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தும் யுனிசெஃப்!

DIN

சூடான் மோதலில் 330 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1.3 கோடி பேருக்கும் அதிகாமானோருக்கு உதவி தேவைப்படுவதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

சூடானில் போரில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவம் அந்த நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக சூடானில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்குமிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இவர்களது இந்த சண்டையில் 958 பொதுமக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் இதை விட உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. 

இது குறித்து யுனிசெஃப் கூறியிருப்பதாவது: சூடானின் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் நடைபெறும் இந்த அதிகாரப் பகிர்வு மோதலில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலுக்கும் குழந்தைகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால், இவர்களுக்கு இடையேயான மோதலில் சிக்கி குழந்தைகள் காயமடைகின்றனர், துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர், நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கும் குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த இரண்டு மாத மோதலில் 20 லட்சம் மக்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து இடம் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தின் பாதியிலிருந்து இதுவரை 71 குழந்தைகள் பசியினால் இறந்துள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

SCROLL FOR NEXT