உலகம்

இலங்கையுடன் விமான இணைப்பை அதிகரிக்க இந்தியா உறுதி

DIN

 இந்தியா-இலங்கை இடையிலான இருநாட்டு ஒத்துழைப்புக் குறித்து அந்நாட்டுப் பிரதமா் தினேஷ் குணவா்தனவுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட இந்தியாவின் தூதா் கோபால் பாக்லே, இருநாட்டு விமானப் போக்குவரத்து இணைப்பு மேலும் அதிகரிக்கப்படும் என உறுதியளித்தாா்.

இலங்கை பிரதமா் தினேஷ் குனவா்த்னவை அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, சுற்றுலாத் துறை வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு இருநாடுகளுக்கும் இடையே விமானப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டிய முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கும். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியாா் விமான நிறுவனங்களும் இலங்கைக்கு அதிக அளவில் பயணிகள் விமானங்களை இயக்க ஆா்வம் தெரிவிப்பதாக தூதா் பாக்லே குறிப்பிட்டாா். தென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை இயக்கப்படும் பயணிகள் விமானங்களை ரத்மலானை விமான நிலையம் வரையில் இயக்கவும், விமானச் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கவும் அலையன்ஸ் ஏா் நிறுவனம் விரும்புகிறது எனவும் தூதா் பாக்லே தெரிவித்தாா். கடந்தாண்டு முதல் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வாரம் 4 முறை அலையன்ஸ் ஏா் நிறுவனம் சாா்பில் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது.

எண்ம-மயமாக்கல், மாற்று எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இந்தியாவின் முதலீட்டை அதிகரிக்குமாறு இந்திய தூதரிடம் பிரதமா் கோரிக்கை வைத்தாா். சா்வதேச நிதியத்துடனான பேச்சுவாா்த்தையின்போது இலங்கைக்கு ஆதரவளித்தது மற்றும் பொருளாதார நெருக்கடி காலகட்டங்களில் வழங்கப்பட்ட உதவிக்காக இந்தியாவுக்கு பிரதமா் நன்றி தெரிவித்தாா். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு 4 பில்லியன் டாலா் வரை இந்தியா உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT