உலகம்

இந்தோனேசியா: எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானார்கள். 

இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் அரசுக்கு சொந்தமான எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு நேற்று இரவு 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் எரிவாயு கிடங்கு அருகே வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், 260 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 17 பேர் பலியாகினர். மேலும் 51 பேர் காயமடைந்தனர். எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். 

அவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு இந்தோனேசிய தலைநகரில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் வசித்த 1,000 க்கும் மேற்பட்டோர் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT