ஜெட்டா: சௌதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் யோகக் கலை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. நிலநடுக்கம் தாக்கினால் சென்னை தாங்குமா?
சௌதி யோகா ஆணையத்தின் தலைவர் நௌஃப் அல்-மர்வாய் இது பற்றி கூறுகையில், சௌதி அரேபியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் யோகக் கலையை அறிமுகப்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்
ஜெட்டாவில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மர்வாய், சௌதி அரேபியாவில் உள்ள ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி யைமங்களில் யோகாவை அறிமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
யோகா பயிற்சி மேற்கொண்டால் உடல்நலம் மிகுந்த பயன்களை அடைகிறது. உடல் மற்றும் மனநலத்துக்கு உகந்ததாக உள்ளது என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.