உலகம்

செர்பியா: தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு!

செர்பியாவின் தென்மேற்கு நகரம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

DIN

செர்பியாவின் தென்மேற்கு நகரம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தானது காலை 7 மணிக்கு பெல்கிரேடு நகரிலிருந்து தென்மேற்கு திசையில் உள்ள நோவி பஜார் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்ட உடனேயே தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னதாகவே தீ குடியிருப்பு பகுதிகளுக்கு வேகமாகப் பரவி விட்டது. தீயணைப்பு வீரர்கள் அனைத்துக் குழந்தைகளும் ஒரே அறையில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் தீயினால் ஏற்பட்ட புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடின் காரணத்தினால் மூச்சுத் திணறி இறந்து கிடந்துள்ளனர். இந்தக் குழந்தைகளின் பெற்றோர் மற்றொரு அறையில் இருந்துள்ளனர். அவர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT