ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான எண்ணெய்க் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறந்தது 19 போ் பலியாகியுள்ளனர். எரிந்த வீடுகள் மற்றும் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போன 3 பேரை தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.
வடக்கு ஜகாா்த்தாவுக்கு அருகே மக்கள்நெருக்கடி மிகுந்த தனா மேராவில் அரசு நடத்தும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பொ்ட்மினாவுக்குச் சொந்தமான பிளமபாங்க் எண்ணெய்க் கிடங்கு உள்ளது. இது இந்தோனேசியாவின் எரிபொருள் தேவைகளில் 25 சதவீதத்தை நிறைவு செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த எண்ணெய்க் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 2 மணி நேரத்தில் அருகில் உள்ள பகுதிகளுக்கு தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். 52 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 260 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
விபத்து நிகழ்வதற்கு முன்பாக கடுமையான பெட்ரோல் நெடி காற்றில் பரவியதாகவும், இதனால் சிலருக்கு வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், பெரும் வெடிப்பு சத்தம் கேட்டது. கரும்புகை மற்றும் ஆரஞ்சு தீப்பிழம்புகளின் வானத்தை நோக்கி கிளம்பியதை அடுத்து மக்கள் பதட்டத்துடன் வெளியேறும் விடியோக்கள் வெளியாகி உள்ளன.
இந்த விபத்தினால் இதுவரை 19 போ் பலியாகி உள்ளதாகவும், 35 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காணமால் போன 3 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபா் ஜோகோ விடோடோ ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு வழங்கும் என உறுதியளித்தாா்.
மேலும், எண்ணெய்க் கிடங்கு அமைந்துள்ள பகுதியில் இருந்து மக்களை மாற்றுப் பகுதியில் குடியமா்த்தவும் அல்லது எண்ணெய்க் கிடங்கை மற்றொரு இடத்துக்குச் கொண்டு செல்லவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் துறை நிறுவனங்களின் அமைச்சர் மற்றும் ஜகாா்த்தா மாகாண ஆளுநருக்கும் உத்தரவிட்டுள்ளேன். "இங்கு மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசுக்குச் சொந்தமான முக்கிய கட்டட அமைப்புகள் தணிக்கை மற்றும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும், ஏனென்றால் இது மனித வாழ்க்கையை உள்ளடக்கியது" என்று விடோடோ கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.