உலகம்

கடலில் மிதக்கும் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

உலகம் முழுவதும் உள்ள நீர்பரப்புகளில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

உலகம் முழுவதும் உள்ள நீர்பரப்புகளில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பயன்பாடு முன்பைக் காட்டிலும் தற்போது வேகமாக அதிகரித்துவருகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் எளிதில் மக்காத தன்மையுடன் இருப்பதால் அவை சூழலியலுக்கு கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு முனைப்பு காட்டி வருகின்றன. 

இந்நிலையில் உலகின் மொத்த நீர்பரப்பில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

1979 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் உலகின் கடல்நீர்பரப்புகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்பான ஆய்வை அமெரிக்காவை மையமாகக் கொண்ட 5 கைர்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்டது. 

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான தீர்வை நோக்கமாகக் கொண்ட இந்த ஆய்விற்காக பல்வேறு பகுதிகளின் கடல்நீர்பரப்புகளிலிருந்து 12 ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில் 2019 ஆண்டு நிலவரப்படி 82 முதல் 358 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் நீரில் மிதந்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகரித்துவரும் பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை அறிவுறுத்தியுள்ள இந்த ஆய்வு முடிவானது மிகுந்த அவசரத்துடன் பிளாஸ்டிக் பயன்பாட்டை அணுக வேண்டிய இடத்தில் உலகம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

காலம் வழங்கிய கொடை!

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

SCROLL FOR NEXT