உலகம்

செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் கைது

DIN

செர்பியாவில் மீண்டும் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 14 பேர் காயமடைந்தனர். மர்ம நபர், காரில் இருந்தபடி தானியங்கி துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இரவு முழுவதும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சந்தேக நபரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு முழு தேசத்தின் மீதான தாக்குதல் என்றும், கைது செய்யப்பட்ட நபர் நாஜி சார்பு வாசகத்துடன் கூடிய டி-சர்ட்டை அணிந்திருந்தார் என்றும் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த புதன்கிழமை சொ்பியாவிலுள்ள பள்ளியொன்றில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவா்கள், ஒரு பாதுகாவலா் பலியாகினா். தாக்குதல் நடத்திய அதே பள்ளியின் மாணவனை காவல்துறையினர் கைது செய்தனா். இந்த துப்பாக்கிச்சூடு மறுநாளே செர்பியாவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியிருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT