ட்விட்டருக்கு புதிய சிஇஓவை நியமித்தார் எலான் மஸ்க்
எலான் மஸ்க் தனது ட்விட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு புதிய சிஇஓவை நியமித்துள்ளார்.
எலான் மஸ்க் தனது ட்விட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு புதிய சிஇஓவை நியமித்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில், எலான் மஸ்க் தனது ட்விட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு புதிய சிஇஓவை நியமித்துள்ளார்.
Advertisement
Advertisement
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சிஇஓ 6 வாரங்களில் பொறுப்பேற்று பணியை தொடங்குவார் என்றும், மென்பொருள் தயாரிப்பு மற்றும் சிசோப்களை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக எனது பங்களிப்பு இருக்கும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மாறியது மோக்கா!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.