உலகம்

சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்:வெற்றிகரமாகப் பயணம்

DIN

சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம், தனது முதல் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

சீன வா்த்தக விமான நிறுவனம் (கோமாக்) சாா்பில் சி919 விமானம் தயாரிக்கப்பட்டது. இது சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானமாகும். இந்த விமானம் தனது முதல் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்தது. சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து 128 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம், சுமாா் இரண்டரை மணி நேர பயணத்துக்குப் பின், தலைநகா் பெய்ஜிங் சென்றடைந்தது. அங்கு அந்த விமானத்துக்கு வானில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சீன அதிகாரிகள் கூறுகையில், ‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தின் பிரவேசத்தால் போயிங், ஏா்பஸ் போன்ற வெளிநாட்டு விமானங்களை சீனா சாா்ந்திருப்பது குறையலாம். அதேவேளையில், சா்வதேச விமானப் போக்குவரத்து சந்தையில் வெளிநாட்டு விமானங்களுக்கு சீன தயாரிப்பு விமானம் போட்டியை ஏற்படுத்தக் கூடும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்! -திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமல்

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

SCROLL FOR NEXT