கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரால், இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN


நியூ யார்க்: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரால், இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடி சாக்கோ என்ற 21 வயது இளைஞர், ஞாயிறன்று (அந்நாட்டு நேரப்படி), தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களது பெற்றோர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் சென்று குடியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சாக்கோ, படித்துக் கொண்டே, பகுதிநேரமாக பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், அவரிடம் வழிப்பறி நடந்தபோது, வழிப்பறி கொள்ளையர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. இவரது இறுதிச்சடங்குகள் பிலடெல்பியாவில் நடந்து முடிந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதத்தில்தான், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சயீஷ் வீரா என்ற 24 வயது இளைஞர், ஓஹியோவில் எரிபொருள் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT