உலகம்

அக். 7 தாக்குதலில் தொடர்புடைய ஹமாஸ் படைத் தளபதி மரணம்: இஸ்ரேல்

காஸாவின் ஜாபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்  ஹமாஸ் படையின் முக்கிய தளபதி உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

காஸாவின் ஜாபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்  ஹமாஸ் படையின் முக்கிய தளபதி உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் படையினர் கடந்த அக். 7 ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் 25 நாள்களை எட்டியதுடன் தீவிரமடைந்தும் வருகிறது. 

வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஹமாஸ், தற்போது தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினர், நேற்று(செவ்வாய்க்கிழமை) காஸாவிலுள்ள 8 அகதிகள் முகாம்களில் மிகப்பெரிய ஜபாலிலா முகாமில் தாக்குதல் நடத்தினர். 

இதில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சண்டையில் இஸ்ரேல் தரப்பில் 2 வீரா்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அக். 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஹமாஸ் படையினர் மூத்த தளபதி இப்ராஹிம் பியாரி என்பவர் நேற்றைய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் படையைச் சேர்ந்த பலரும் உயிரிழந்ததாகக் கூறியுள்ளது. 

இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும் பாலஸ்தீனியர்கள் இதுவரை 8,525 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT