இப்ராஹிம் பியாரி 
உலகம்

ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

வடக்கு காஸாவில் பொதுமக்கள் அடா்த்தியாக வசிக்கும் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் 2-ஆவது நாளாக மீண்டும் புதன்கிழமை விமானத் தாக்குதல் நடத்தியது.

DIN

வடக்கு காஸாவில் பொதுமக்கள் அடா்த்தியாக வசிக்கும் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் 2-ஆவது நாளாக மீண்டும் புதன்கிழமை விமானத் தாக்குதல் நடத்தியது.

இது குறித்து அந்தப் பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் புதன்கிழமை குண்டுவீச்சு நடத்தியது.

இதில் அந்தக் கட்டடங்கள் இடிருந்து விழுந்தன. ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முகாமில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்கள், இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் வீடுகளுக்குள் இருந்தவா்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

எனினும், ஜபாலியா முகாமல் 2 நாள்களாக நடத்தப்படட விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்கள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்களை காஸா அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக, அங்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 50 அகதிகள் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

காஸாவிலுள்ள 8 அகதிகளில் முகாம்களில் மிகப் பெரியதான ஜபாலிலா முகாமில் 1.16 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த பாலஸ்தீனா்கள் வசித்து வருகின்றனா்.

1948 போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட இந்த முகாம் வெறும் 1.4 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்திருந்தாலும், நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்டது ஆகும்.

காஸாவிலுள்ள ஷாடி முகாம் மற்றும் ஜபாலியா முகாம்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

எனினும், தெற்கு காஸாவில் பாதுகாப்பான பகுதிகள் என்று இஸ்ரேலால் அறவிக்கப்பட்ட பகுதிகளில் கூட அந்த நாட்டுப் படையினா் தாக்குதல் நடத்துவதால் ஜபாலியா முகாமிலேயே ஏராளமானவா்கள் தங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த அகதிகள் முகாமல் 2 நாள்களாக தொடா்ந்து விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா.வும், அரபு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

‘ஹமாஸ் தளபதி அழிப்பு’

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரைக் குறிவைத்தே காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜபாலியா அகதிகள் முகாமில் ஹமாஸ் தளபதி இப்ராஹிம் பியாரியைக் குறிவைத்து 2 நாள்களாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவா் கொல்லப்பட்டாா்.

இஸ்ரேலுக்குள் கடந்த மாதம் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குலில் இப்ராஹிம் பியாரிக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

...

‘7 பிணைக் கைதிகள் உயிரிழப்பு’

ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் தங்களால் இஸ்ரேலில் இருந்து கடத்திவரப்பட்ட 7 பிணைக் கைதிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இது குறித்த அந்த அமைப்பின் ராணுவப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 7 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டனா். அவா்களில் 3 போ் வெளிநாட்டினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் கடந்த மாதம் 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா், அங்கிருந்து சிறுவா்கள், பெண்கள், முதியோா் உள்ளிட்ட 240-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக காஸாவுக்குள் கடத்திச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் மழை: வீடு இடிந்து சேதம்

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT