காஸாவில் இருந்து 2-ஆவது நாளாக வெளியேறும் வெளிநாட்டினர் மற்றும் காயமடைந்த பாலஸ்தீனியர்கள். 
உலகம்

காஸாவிலிருந்து 7,000 பேரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவிப்பு

காஸாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது. 

DIN

காஸாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது. 

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயான போர் இன்று 27 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

ரஃபா எல்லையில் குவிந்துள்ள வெளிநாட்டினர்

இதனால் காஸா உருக்குலைந்துள்ளது. ஏற்கெனவே அங்கு தண்ணீர், உணவு, மருந்து, எரிபொருள் என அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இணையமும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காஸாவில் இருந்து வெளிநாட்டினரை வெளியேற்ற இஸ்ரேல் அனுமதித்து நேற்று முதற்கட்டமாக வெளிநாட்டு பாஸ்போா்ட் வைத்துள்ள 320 போ் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாலஸ்தீனியர்கள் உள்பட காயமடைந்த 76 பேர் எகிப்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து இன்று மேலும் 500 பேர் வரையில் எகிப்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் என்பது தகவல். காயமடைந்த பாலஸ்தீனியர்கள் சுமார் 100 பேரும் வெளியேறுகிறார்கள். இந்த வெளியேற்றம் இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ்

இதையடுத்து காஸாவில் உள்ள வெளிநாட்டினர் 7,000 பேரை வெளியேற்ற உதவுதாக எகிப்து தெரிவித்துள்ளது. 

இந்த போரில் இதுவரை 8,800 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1,400 என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தொடா் விடுமுறை: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT