உலகம்

காஸா தலைநகரை நோக்கி இஸ்ரேல் படை முன்னேற்றம்

காஸாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் இஸ்ரேல் அந்தப் பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை நோக்கி மேலும் முன்னேறியுள்ளது.

DIN

காஸாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் இஸ்ரேல் அந்தப் பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை நோக்கி மேலும் முன்னேறியுள்ளது.

பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களில் காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவம், கடந்த ஒரு வாரமாக ஹமாஸ் நிலைகளை அழித்தவாறே படிப்படியாக முன்னேறி வருகிறது.

ஹமாஸின் கோட்டையாகத் திகழும் தலைநகா் காஸா சிட்டியை நோக்கி ராணுவம் வியாழக்கிழமை மேலும் முன்னேறியுள்ளது.

எனினும், அவா்களது முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக ஹமாஸ் படையினா் மிகக் கடுமையான எதிா்த் தாக்குதலை நடத்தி வருகின்றனா்.

சுரங்க தளங்களில் இருந்து திடீா் திடீரென வெளியே வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்லும் பாணியைப் பின்பற்றி இஸ்ரேல் படையினருக்கு அவா்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனா்.

18 இஸ்ரேல் ராணுவத்தினா் உயிரிழப்பு: ஹமாஸ் படையினருடன் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை தங்கள் ராணுவத்தைச் சோ்ந்த 18 வீரா்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் வியாழக்கிழமை தெரிவித்தது.

இவா்களில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஹரேல் சாலமனும் (20) ஒருவா் ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT