உலகம்

இஸ்ரேலில் சிஐஏ தலைவர்! 

அமெரிக்க வெளியுறவு அமைச்சரைத் தொடர்ந்து அந்நாட்டின் புலனாய்வு அமைப்பின் இயக்குனர்(சிஐஏ) வில்லியம் பர்ன்ஸ் இஸ்ரேல் வந்துள்ளார். 

DIN

அமெரிக்க வெளியுறவு அமைச்சரைத் தொடர்ந்து அந்நாட்டின் புலனாய்வு அமைப்பின் இயக்குனர்(சிஐஏ) வில்லியம் பர்ன்ஸ் இஸ்ரேல் வந்துள்ளார். 

தொடர்ந்து இஸ்ரேலியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் முன்னெடுத்த தற்காலிக போர்நிறுத்த கோரிக்கையை அவரும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பர்ன்ஸ் விவாதிப்பார் எனத் தெரிகிறது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினா் இஸ்ரேலுக்குள் புகுந்து பலமுனைத் தாக்குதல் நடத்தி, வெளிநாட்டவா் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா். அவா்களை மீட்கவும், ஹமாஸ் படையினருக்குப் பதிலடி தரவும் காஸாவில் தரைவழி, வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடா்பாக மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நாட்டுத் தலைவா்களைச் சந்தித்து வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சா்வதேச நாடுகளின் மனிதாபிமான உதவிகளை காஸா முனையில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக போா் நிறுத்த நடவடிக்கைக்கு அவா் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தாா். எனினும், அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்கும் வரையில் ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதலில் இருந்து பின்வாங்கமாட்டோம் என இஸ்ரேல் பிரதமா் உறுதிபடத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT