முகப்பு
உலகம்

காஸா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் பலி!

மத்திய காஸாவில் உள்ள மருத்துவமனை அருகே கடும் சண்டை நடந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:19 AM
பகிர்:

இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மிகப்பெரிய மருத்துமனையான அல்-ஷிபா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக காஸா அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

“அல்-ஷிபா மருத்துமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

அல்-ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா இதனை உறுதி செய்துள்ளார். இஸ்ரேலின் டாங்கர் வாகனங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து இஸ்ரேல் தரப்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேல், இந்த மருத்துவமனையை ஹமாஸ் படையினர் புகலிடமாகப் பயன்படுத்துவதாகவும் இங்கிருந்து அவர்கள் தாக்குதலைத் திட்டமிடுவதாகவும் தெரிவிக்கிறது. 

இந்தக் குற்றச்சாட்டுக்கும் மருத்துவமனை தரப்பும் அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது.

மருத்துமனையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் அச்சமடைந்துள்ளனர். தங்குவதற்கு பாதுகாப்பான இடம் எங்குமில்லை எனக் கவலையடைந்துள்ளனர். 

கடந்த வார இறுதியில் இந்த மருத்துவமனை அருகில் நின்றிருந்த அவசர ஊர்திகள் மீது இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →