மணமாகாதவர்களையும் காதல் உறவில் இல்லாதவர்களையும் குறிக்கும் ‘சிங்கிள்ஸ்’ என்கிற வார்த்தை இணைய உலகில் பிரபலம்.
சிங்கிள்ஸ் என்பவர்கள் காதலில் இணைய விரும்பாதவர்கள் இல்லை, இணைவதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்கள். இதிலிருந்து உருவான முரட்டு சிங்கிள் என்கிற பதமும் சமூக ஊடகங்களில் வைரலான ஒன்று.
பேச்சுலர் தினம் எனவும் அழைக்கப்படுகிற இந்த நாள் சீனாவில் ஷாப்பிங்குக்கான நாளும் கூட. மக்கள் அதிகளவில் இந்த நாளில் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்குகிறார்கள். விற்பனையகங்களும் இணைய விற்பனை தளங்களும் மக்களைக் கவர ஒரு வாரம் முன்பிருந்தே தள்ளுபடியை அறிவிக்கத் தொடங்குகிறார்கள்.
உலகம் முழுவதும் காதலர்களுக்கு ஒரு தினம் இருப்பது போல சிங்கிள்ஸுக்கான தினமாக நவம்பர் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் சிங்கிளாக இருப்பவர்கள் கொண்டாட்டத்தைத் திட்டமிடுகின்றனர். தங்களை மகிழ்வித்துக் கொள்ள பொருட்களை வாங்குகிறார்கள். தங்களுக்கு பிடித்த விஷயங்களை மேற்கொள்கிறார்கள்.
இதையும் படிக்க: டீப் ஃபேக் தொழில்நுட்பம்... வரமா? சாபமா?
சீனாவின் ஆன்லைன் விற்பனை தளமான அலிபாபா நிறுவனம் இதனை பிரபலப்படுத்தியது. 2009 முதல் இரட்டை 11 (11.11) என்கிற பெயரில் நவம்பர் 11-ம் தேதியைக் குறிக்கும் வகையில் தள்ளுபடிகளை வாரி இறைத்தது.
இந்த உத்தியை எல்லா இணைய நிறுவனங்களும் சீனாவில் பின்பற்ற தொடங்க நாடே கொண்டாடும் ஷாப்பிங் தினமாக மாறியது.
ஆனால் இதற்கான தொடக்கம் சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தில் 1990-களில் சிங்கிள் இளைஞர்களால் ஆரம்பித்தது.
மற்ற நாடுகளில் இதே தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் மார்ச் 11-ம் தேதி, உலக சிங்கிள்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.