மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம்!
காஸாவின் அல்-ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் உள்நுழைந்து சோதனையிட்டு வருகிறது.
மத்திய காஸாவில் உள்ள பிரதான மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையை, ஹமாஸ் கட்டுப்பாட்டு மையமாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
அந்த மருத்துவமனையை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம் இன்று (நவ.15) காலை மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளது.
மருத்துவமனையின் வளாகத்துக்குள் இஸ்ரேலின் டாங்கிகள் நுழைந்துள்ளதாகவும் அவசர மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் உள்பட மருத்துவமனையின் எல்லா இடங்களிலும் ராணுவத்தினர் நுழைந்திருப்பதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், துல்லியமான மற்றும் இலக்குசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் போர் ஹமாஸுடன்தான், பொதுமக்களோடு அல்ல என்பதைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
ஹமாஸ் பதுங்கியிருக்கும் இடங்கள் மிக துல்லியமாக கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் மட்டும் தாக்குதலுக்குத் தயாராக நுழைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது இஸ்ரேலிய ராணுவம்.
ராணுவ வீரர்கள் ஒலிபெருக்கி மூலமாக மருத்துவமனையில் இருக்கும் இளைஞர்களைச் சரணடையக் கூறி அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: இனி அமெரிக்காவிலும் தீபாவளி விடுமுறை நாள்!
மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள் வைக்கப்பட்டிருந்த கிடங்குகள் ராணுவத்தால் தகர்க்கப்பட்டுள்ளன.
மருத்துவமமைக்குள் சோதனையில் ஈடுபட்டு வருகிறது, இஸ்ரேல் ராணுவம். அங்குள்ள மக்கள் மற்றும் நோயாளிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரை எந்தவித ஹமாஸ் கட்டுபாட்டுக்கான ஆதாரமும் பிணைக்கைதிகள் இருப்பதற்கான ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.