ஷகிப் அல் ஹசன் 
உலகம்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர்!

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார்.

DIN

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணிக்காக கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருபவர் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து முன்னணி வீரராக உள்ளார்.

இந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அவமி லீக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை ஷகிப் அல் ஹசன் பெற்றுள்ளதாக அவமி லீக் கட்சியின் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷகிப் அல் ஹசனின் விண்ணப்பத்தை அவமி லீக் கட்சியின் நாடாளுமன்றக் குழு பரிசீலனை செய்த பிறகு போட்டியிடுவது உறுதி செய்யப்படும்.

ஷகிப் அல் ஹசனின் சொந்த ஊரான மகுரா, வங்கதேச தலைநகரான தக்கா உள்ளிட்ட 3 தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக அவமி லீக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT