கோப்புப்படம் 
உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

DIN

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், 

நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாக பதிவாகியுள்ளது. இது இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் டோபெலோவிற்கு மேற்கே 94 கி.மீ(58 மைல்) தொலைவில் 116 கி.மீட்டர்(72 மைல்) ஆழத்தில் தாக்கியுள்ளது. 

இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

கடந்தாண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 331 பேர் கொல்லப்பட்டனர், 600 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT