உலகம்

காஸாவில் போர் நிறுத்தம்: பிரான்ஸ் அதிபர் வரவேற்பு

DIN

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13,300-ஐ கடந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 

பிணைக் கைதிகளை மீண்டும் தாயகம் அழைத்து வர இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக இன்று இரவு முதல் 4 நாள்களுக்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கவுள்ளதால், அதுவரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என இஸ்ரேல் அரசு தெரிவித்தது.

இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

"பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர் நிறுத்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க அயராது உழைத்து வருகிறோம்.

அறிவிக்கப்பட்டுள்ள மனிதாபிமான போர்நிறுத்தம் மூலம் காஸாவில் உள்ள மக்களை மீட்கவும், உதவிகளை வழங்கவும் அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமாவுக்கு பறந்த சிறகடிக்க ஆசை தொடர் நடிகை!

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

‘தேர்தல் ஆணையத்தின் பெரும் தோல்வி’: உயர்நீதிமன்றம்

ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களித்த பெரும்புள்ளிகள்!

நாங்கள் காரணம் அல்ல: ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல்

SCROLL FOR NEXT