கோப்புப்படம் 
உலகம்

போர் நிறுத்தம் நீட்டிப்பு : 33 கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!

தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 33 கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. 

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தின் முதல் நாளான இன்று 33 பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

முதல்கட்டப் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான கடந்த திங்கள் கிழமை இரவு, 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட 11 பிணைக்கைதிகளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போர்நிறுத்தத்தின் முதல் நாளான இன்று அதிகாலை, 11 பிணைக்கைதிகளுக்கு இணையாக 33 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்து மேற்கு கடற்கரைப் பகுதிக்கு கொண்டு சென்றது இஸ்ரேல். 

இதையும் படிக்க: அமெரிக்கா:இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளா்கள்

இந்தப்போர் நிறுத்தத்தின் மூலம் காஸாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மருந்துப்பொருள்கள், எரிபொருள்கள் ஆகியவை தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தாலும், நிவாரணப்பொருள்களில் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 200 லாரிகள் வீதம் இரண்டு மாதங்களுக்கு நிவாரண உதவிகள் காஸாவிற்கு அனுப்பப்பட வேண்டும் என ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பதவி உயா்வுகோரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

SCROLL FOR NEXT