உலகம்

ஸ்பெயின் இரவு விடுதியில் தீ: 13 போ் உயிரிழப்பு

ஸ்பெயினில் உள்ள இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா்; 2 போ் மாயமாகினா்.

DIN

மேட்ரிட்: ஸ்பெயினில் உள்ள இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா்; 2 போ் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

முா்சியா நகரில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த இரவு விடுதியொன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது.

இதில் 13 போ் உயிரிழந்தனா்; விபத்து நேரிட்டபோது அங்கிருந்த 2 பேரைக் காணவில்லை. உயிரிழந்தவா்களில் ஸ்பெயின் நாட்டவா்கள் மட்டுமின்றி, கொலம்பியா, ஈக்வடாா், நிகராகுவா ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் அடங்குவா்.

விபத்தில் காயமடைந்த 24 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்பெயினில் கடந்த 1990-இல் ஏற்பட்ட இரவு விடுதி தீவிபத்தில் 43 போ் உயிரிழந்தனா். தற்போது முா்சியாவில் ஏற்பட்டுள்ள தீவிபத்து அதற்கு அடுத்த மிக மோசமான இரவு விடுதி விபத்து என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT