உலகம்

எகிப்து: காவல் அதிகாரி சுட்டதில் 2 இஸ்ரேலியர்கள், எகிப்தியர் ஒருவர் பலி!

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள சுற்றுலா தளத்தில் காவல் அதிகாரி சுட்டதில் 2 இஸ்ரேலியர்கள், 1 எகிப்தியர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா தெரிவித்துள்ளது. 

DIN

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள சுற்றுலா தளத்தில் காவல் அதிகாரி சுட்டதில் 2 இஸ்ரேலியர்கள், 1 எகிப்தியர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
எகிப்தின் துறைமுக நகரமான அலெக்சாண்டிரியாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது காவல் அதிகாரி திடீரென துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 இஸ்ரேலியர்கள், எகிப்தியர் ஒருவர் பலியானார்கள். மேலும் ஒருவர் காயமடைந்தார். 
உடடினடியாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தியதாக வெளியான செய்திகளை ஆராய்ந்து வருவதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸா எல்லை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையே போர் மூண்டுள்ள நிலையில் எகிப்தில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து மீது காவல் அதிகாரி ஒருவரே துப்பாக்கிசூடு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

SCROLL FOR NEXT