உலகம்

நெதன்யாகு கொல்லப்படுவார்: துருக்கி அமைச்சர் சர்ச்சை கருத்து

DIN

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குறிப்பிட்டு நீங்களும் ஒரு நாள் கொல்லப்படுவீர்கள் என்று துருக்கி கல்வித் துறை துணை அமைச்சர் நசீஃப் இல்மாஸ் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (அக்.7) அதிகாலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா்; இதில் ஏராளமான இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து போா் பிரகடனம் செய்த இஸ்ரேல், ஹமாஸ் படையினரைக் குறிவைத்து தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோா் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. இந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் விமானப் படை நடத்தும் தாக்குதல் விடியோவை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த விடியோவை பதிவிட்டு, துருக்கி கல்வி துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், ஒருநாள் நெதன்யாகுவையும் சுட்டு வீழ்த்துவார்கள். நீங்களும் கொல்லப்படுவீர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாகவும் தெரிவித்தாா். அதுபோல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT