உலகம்

ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

ஆப்கானிஸ்தானின் காபூல் அருகே வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN


காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் அருகே வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வறுமையில் வாடும் நாட்டில் இந்த வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

தேசிய நில அதிர்வு மைய தகவலின் படி, ஆப்கானிஸ்தானின் காபூல் அருகே வெள்ளிக்கிழமை(அக்.13)  காலை 6.39 மணிக்கு பூமிக்கு அடியில் 50 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

இந்த நடுநக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஏற்கனவே நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, மூன்று முறை கடுமையான நிலநடுக்கங்களும், குறைந்த அளவிலான நில அதிா்வுகளும் ஏற்பட்டன.

நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் 20 கிராமங்களில் 1,983 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது, 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 போ் புதைந்தனா்

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

SCROLL FOR NEXT