கிரேடா துன்பர்க் 
உலகம்

உடனடி போர் நிறுத்தம் தேவை: கிரேடா துன்பர்க்!

ஸ்வீடனைச் சேர்ந்த சுழலியல் செயற்பாட்டளர் கிரேடா துன்பர்க் உடனடி போர் நிறுத்தத்திற்கான கோரிக்கையை வைத்துள்ளார்.

DIN

இஸ்ரேல் - பாலஸ்தீன போர், 14-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மனிதநேய ஆர்வலர்களும் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானற்ற செயல்களுக்கு தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளரான கிரேடா துன்பர்க், பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “இன்றைக்கு பாலஸ்தீனம் மற்றும் காஸாவுக்கு ஆதரவாக நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். உடனடி போர் நிறுத்தத்திற்காகவும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நீதியும் சுதந்தரமும் கிடைக்கவும் உலகம் குரல் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

வாரந்தோறும் சூழலியலுக்கு, மக்களுக்கு எதிராக நடத்தப்படும் செயல்களைக் கண்டித்து அவர் போராடுவதைத் தொடர்ச்சியாக அவரது பதிவுகளில் காண முடிகிறது.
 
270-வது வாரம் எனக் குறிப்பிட்டு இந்தப் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார், கிரேடா துன்பர்க்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT